திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக உறைபவன், திருக்குறுங்குடியில் அழகிய நம்பியாக அருள் பாலிப்பவன், திருத்தண்காலில் தண்காலப்பனாக வாசம் செய்பவன், திருக்கரம்பனூரில் புருஷோத்தமனாகத் திகழ்பவன், முத்துக்களைக் கொண்ட கரிய நிறமான ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும், ஏழு உலகங்களையும், ஊழிக்காலத்தில் உண்டு உமிழ்ந்தவனை நான் தென்னரங்கத்தில் தரிசித்தேன் என்கிறார்.
உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் நம் மீது வைத்துள்ள கருணையால் பல திருத்தலங்களில் அருள் பாலிக்கின்றார். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நமது மனம் திருத்தலங்களில்தான் இறைவனுடன் சங்கமித்து ஒருமுகப்படுவதற்கான நிலை ஏற்படுகின்றது. அவ்விதம் ஒருமுகப்படும் போது இறைவனே நம் மனதில் கோயிலாகக் குடிகொள்வான். அத்தகைய ஒரு நிலை வரும்வரை நாம் திருக்கோயில்களுக்கு செல்வது அவசியம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
மென்மையான இளம் தனங்கள் நிறம் மாறிப் பசலை என்னும் நோய் பூத்திருக்கின்றன. கயல் விழிகளில் கண்ணீர் ததும்பி இருக்கிறது. அடிக்கடி பிரமை பிடித்தது போல் தனியே நிற்கிறாள். சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் பேடைகளோடு மகிழும் ஒலி கேட்டு உடல் உருகி, அவள் தன்னோடு தொடர்பு கொண்டதை எண்ணி பகவான் எழுந்தருளியிருக்கும் திருத்தண்காவையும், குளிர்ந்த திருக்குடந்தையையும், திருக்கோவலூரையும் பாடி நடனமிடும் குரலைக் கேட்டுப் பெண்ணே! வாய் விட்டு நம் மணாளனை அழைப்பது நம் குலத்திற்கு ஆகாது என்று கூறி திருநறையூரைப் பாட மறந்ததேனோ? என்ற பொருளில் பகவானை நினைத்து தன் பெண் புலம்புவதை திருத்தாயார் நிலையில் ஆழ்வார் பாடுகிறார்.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக