நம்மாழ்வார் திருவாய்மொழி
எல்லா மக்களும் தன் சொந்த
நிமித்தமாக திருவண்பரிசாரத்து திருநகர திருவீதிகளில் வழிப்போக்கர்களாக வந்து
செல்கிறார்கள். அவர்கள் சம்சாரிகளாக தமக்கு வேண்டிய காரியங்களை மட்டும் செய்து
கொண்டிருக்கிறார்கள். இத்தலத்தில் நான் இருப்பதுகூட தெரியாமலும், நம்மை
அழைப்பார்கள் என்று நினைத்தும் யாரும் வருவதாயில்லை. அத்தலத்தில்
எழுந்தருளியிருக்கும் திருவாழ் மார்பனிடம் என்னைப் பற்றிச் சொல்பவர் ஒருவருமே
இல்லையா? அதனால்தான் பெருமானும் நம்மை அழைக்கவில்லை என்று
வருந்துகிறார். வடிவழகாயுள்ள திருச்சகரத்தையும், வெண்சங்கையும் கைகளில் சுமந்துகொண்டு
உலகைக் காக்க நீங்கள் அலைகின்றபோது உம்மோடு கூடப் பணி செய்ய ஒரு அடியவனும்
இருக்கிறான் என்று சொல்ல மாட்டார்களோ? என்று கேட்கிறார் ஆழ்வார். இவ்வுலக மக்களின் நலனுக்காக ஆழ்வார் நினைத்து,
நம்மை பெருமானோடு சேர்த்து, அவர்களையும் உய்விக்க வேண்டும் என்று நினைக்கும்
அவருக்கென்று யாரும் சிரமமெடுத்து பெருமானிடம் அவரைப் பற்றி யாரும் சொல்லவில்லையே
என்று ஆற்றாமையுடன் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக