திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி
மேலாய்
நிலாத்திங்கள்
துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய்
உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின்
தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே
பேணினேனே.
2059
‘திருநீரகம் என்னும்
திருப்பதியில் குடிகொண்டிருப்பவனே! உயர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்கின்றவனே!
நிலாத்திங்கள் துண்டம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளவனே! அழகிய காஞ்சியிலும், திருஊரகத்திலும்
எழுந்தருளி இருப்பவனே! அழகிய தடாகக் கரையிலுள்ள திருவெஃகாவில் திருக்கண்
வளர்ந்தருள்பவனே! சிந்திப்பாருடையவரின் உள்ளத்தில் உறைபவனே! உலகமெல்லாம்
துதிக்கும்படி திருக்காரகம் என்னும் தலத்தில் நிற்பவனே! கோபியர் உள்ளங்களைக்
கவர்ந்தவனே! விரும்பத்தக்கதாய் அழகிய காவிரியின் தெற்கில் திருப்பேர் நகரில்
இருப்பவனே! என் மனதில் நீங்காமல் காட்சி தருபவனே! பெருமைக்குரிய பெருமானே! உன்
கமலப் பாதங்களை பூஜித்து சேவிக்கின்றேன்’ என்கிறார் ஆழ்வார்.
நீரானது பள்ளத்தில் பாயும். அது
போன்று எம்பெருமான் தாழ் மக்களிடம் எளிதில் சேர்வான். ஸ்ரீகிருஷ்ணர் விதுரனின்
மாளிகையில் தங்கியதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மனிதனின் தேவையே நீர். ஐந்து
வகையான நீர் உள்ளது போன்று எம்பெருமானும் ஐந்து நிலைகளில் நமக்கு அருள்கிறான்.
எம்பெருமானை நினைப்பவரின் நெஞ்சினில் உறைபவன். அது போன்று என் நெஞ்சிலும் உறைபவன்.
இத்தகையவனின் திருவடிகளை ஆவலுடன் கண்டு நின்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக