திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
உளுத்துப் போன
மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத்
திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும்
இடமான திருக்கண்டியூர், திருமெய்யம்,
திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற
திவ்யதேசங்களுக்கு சென்று சேவப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவ வினைகள்
தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்குப் பிறவிப்பயன் என்று கூறவது பிறப்பு
இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்து விட்ட தூய
நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை, பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே
மக்கள் அனைவரும் இத்தகைய திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும்
என்று உணர்த்துகிறார்.
ஒரு காலத்தில், பிரம்மாவுக்கு (நான்முகன்) ஐந்து
முகங்கள் இருந்தனவாம். பிரம்மாவுக்கும், சிவனுக்கும் ஏதோ
காரணத்தால் சண்டை. வந்த கோபத்துக்கு, சிவன் பிரம்மாவின் ஒரு
தலையைக் கிள்ளி எடுத்து விட்டாராம். சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்
கொண்டதால், அந்தக் கபாலம் அவருடைய கையிலேயே ஒட்டிக் கொண்டதாம். இந்தத்
திருக்கண்டியூர் பெருமாள் கோவிலுக்கு வந்து வணங்கிய பின்தான் தோஷம் நீங்கி, அந்தக் கபாலம் அவர் கையை விட்டு நீங்கியதாம். அதானால்தான், இந்தப் பெருமாள் ஹரசாபம் நீக்கிய பெருமாள் என்று
போற்றப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக