திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர்,
திருவரங்கம், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்
ஆகிய திவ்யதேசங்களில் ஆதிசேஷன் மேல் அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான்.
நாம் அவனை நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுவான். ஆனால் நாம் இத்தகைய
பெருவாழ்வினைப் புறந்தள்ளி அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று
கொண்டிருக்கிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில்
நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்கு
தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின்
கருத்தாகும்.
பல புனிதத்
தலங்களில் சயனம் கொண்டிருக்கும் ஆதி முதல்வனான பகவான் அடியார்களின் உள்ளத்திலும்
புகுவதற்காகக் காத்திருக்கிறான். நாம் அவனை நெருங்கினால் அவன் நம்மை ஆட்கொள்ளத்
தயாராக இருக்கிறான். ஆனால் நாம் பகவானைப் புரிந்து கொள்ளாமல் மெத்தனமாக உள்ளோம்.
பேரானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுத்ததாகத்
தெரியவில்லை. அழியும் பொருட்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம். பொருள்
சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழன்றுவிட்டு இறுதியில் மரணத்தை நோக்கிப்
பயணிக்கின்றோம். பகவான் நமக்கு எதுவும் வழங்கவில்லை என்று புலம்பியபடியே
இம்மண்ணுலக வாழ்வினை முடிக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக