திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
மூழிக்களத்து
விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் முன்னவனை. 2681
திருமூழிக்களத்தில் தீபம் போன்றவனே! திருஆதனூரில் அனைவரையும் ஆண்டு உலகுக்கே
படியளக்கும் ஆண்டளக்கும் ஐயனே! இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவைகளுக்கு
எல்லாம் தலைவனாக விளங்கித் திருநீர்மலையில் அருள் பாலிப்பவனே! என்று ஆழ்வார்
பெருமானைப் புகழ்ந்து பாடுகிறார்.
தலைவியானவள் பெருமான் நிகழ்காலம், எதிர்காலம்,
இறந்த காலம் ஆகியவற்றிற்கெல்லாம் தலைவனாக விளங்குபவன் என்று
கூறுகிறாள். தற்போதைய நிகழ்காலச்
செயல்களுக்கு நாம் கருவிகளாக மாத்திரம் இருக்கிறோம். விளைவுகளை ஏற்படுத்துபவன்
பகவானே ஆகும். அதுபோல் எதிர்காலத்தில் எது
நடக்க வேண்டும், எது நடக்கக் கூடாது என்று தீர்மானிப்பவனும்
அவனே. இறந்த காலத்தின் விளைவுகளை எப்படித் தீர்ப்பு செய்ய வேண்டும் என்பதும் எம்பெருமானின் திருக்கரத்தில் உள்ளது.
அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்டவன்தான் எனக்கு விரக தாபத்தை ஏற்படுத்தியவன் என்று
தலைவி கூறுகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக